பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

201



ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின், யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத் தேன் நாறு ஆம்பற் கிழங்கொடு பெறுஉம், இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின், பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ் இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை

உடையை வாழி, எற் புணர்ந்த பாலே! பாரி பறம்பின் பணிச் சுனைத் தெண் நீர் ஓர் ஊர் உண்மையின் இகந்தோர் போலக், காணாது கழிந்த வைகல், காணா வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் - அவன் கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே.

திணையும் துறையும் அவை.

ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

177. மல்லி கிழான் காரியாதி

பொதுவாகப் புலவர்கள் அரசர்களிடம் பொன் அணிந்த யானைகளைப் பெறுகின்றனர். இவர்கள் உள்ளே அனுமதிக்கப் பட்டு வரவேற்கப்படுகின்றனர். என்றாலும் பல நாள் காத்திருந்தே பெறுகின்றனர். காத்திருந்து பெறும் பெருஞ்செல்வம் அது அதனை மல்லி கிழானிடம் எளிதில் பெற இயலும்.

மற்றும் மல்லி கிழான் காரியாதியின் ஊரில் குறும்புகளில் காவல் செய்யும் வில் வீரர்கள் புளிச்சுவையை விரும்பினால் களாப் பழத்தையும், துடரியையும் தின்ன அளிப்பான். இவை திகட்டி விட்டால் ஆற்று மணல் மேட்டில் ஏறி நாவல் பழத்தைப் பறித்து உண்பர். அத்தகைய சிறப்பு உடையவன் ஆதி.

குடநாட்டு எயினர் கொண்டு வரும் எய்ப் பன்றியின் இறைச்சியோடு வெண்ணெல் சோறு பெய்து பனம் ஒலைக் குடையில் வருநர்க்கு வரையாது வழங்குவான்; வீரர்களும் அவருடன் உண்பர். இவை எல்லாம் காரியாதி ஊரில் கிடைப்பன. அவர்கள் மகிழும்படி இவற்றைக் காரியாதி தந்து உபசரிக்கிறான்.