பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



பேரரசர்கள் தரும் பொன் அணிந்த யானைகள் இவற்றோடு ஒப்பிட இங்கு அவன்பால் வருவார்க்குத் தரப்படும் காலை உணவு மதிக்கத் தக்கது. இவற்றிற்கு அவ்வரசர்கள் தரும் பெருஞ் செல்வம் ஈடு ஆகாது.

ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர், வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கிப், பாடிப் பெற்ற பொன் அணி யானை, தமர் எனின், யாவரும் புகுப; அமர் எனின், திங்களும் நுழையா எந்திரப் படு புழை, கள் மாறு நீட்ட நணி நனி இருந்த குறும் பல் குறும்பின் ததும்ப வைகிப், புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர் தீம் புளிக் களாவொடு துடரி முனையின், மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறிக், கருங் கனிநாவல் இருந்து கொய்து உண்ணும், பெரும் பெயர் ஆதி, பிணங்குஅரில் குட நாட்டு, எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப் பைஞ் Dணம் பெருத்த பசு வெள் அமலை, வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, இரும் பனங் குடையின் மிசையும் பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே.

திணையும் துறையும் அவை. மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

178. பாண்டியன் கீரஞ் சாத்தன்

யானைகளையும், குதிரைகளையும் கட்டி வைத்துள்ள மணல் பரப்பிய முற்றம் அதில் புகுந்த சான்றோர்கள் அவர்களைப் புகழ்மிக்க சாத்தன் உணவு உண்ணச் செய்வதே தனித்தன்மையது.

உணவு உண்ணாமல் தயங்குவார் எனில் ‘உண்க என்று தன்மேல் ஆணையிட்டுச் சூள் உரைத்து அவர்களை வேண்டுவான். அருகிருந்து உண்ணச் செய்வான். இங்கே அவன் இனிய சாயலைக் காண முடிகிறது. அவன் மென்மையை உணர முடிகிறது.