பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

203


போர்க் களத்தில் இவன் வீரர்கள் சிலர் கள்ளைக் குடித்து விட்டுப் போதையில் போர் அணிக்குச் செல்லாமல் நெகிழ்வது உண்டு. ஆகா, ஓகோ என்று ஊரின்கண்நெடுமொழி பேசியவர்கள் களத்தில் அதனை மறந்து கள் மயக்கத்தில் கடமை ஆற்றாமல் அஞ்சி விலகி விடுவதும் உண்டு.

அந்த இக்கட்டான சமயத்தில் நெருக்கடி அதைத் தவிர்க்க இவன் படையில் அவர்களுக்கும் முந்திக் கொண்டு வந்து நிற்பான். இங்கே இவன் வன்மையைக் காண முடிகிறது. போர் வீரர்களுக்கு இவன் அரணாக இருந்து செயல்படுவான்.

கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு, பணை முனிந்து கால் இயற் புரவி ஆலும் ஆங்கண், மணல் மலி முற்றம் புக்க சான்றோர் உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று, ‘உண்ம் என இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன் ஈண்டோ இன் சாயலனே வேண்டார் எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின், கள்ளுடைக் கலத்தர் உள்ளுர்க் கூறிய நெடுமொழி மறந்த சிறு பேராளர் அஞ்சி நீங்கும்காலை, ஏமமாகத் தான் முந்துறுமே.

திணை - வாகை துறை - வல்லாண் முல்லை.

பாண்டியன் கீரஞ்சாத்தனை அவர் பாடியது.

179. நாலை கிழவன் நாகன்

‘இந்த மண்ணில் வள்ளல்கள் எனப்பட்டவர்கள் பலரும் மாய்ந்து மறைந்து விட்டனர். இனி யார் என்னை ஆதரிப்பார்கள்? கவிழ்த்து விட்ட எம் பாத்திரங்கள் மறுபடியும் எப்பொழுது மலர்ச்சி பெறும்’ என்று வினவுவதால் உங்களுக்குப் பாண்டிய நாட்டு மறவன் ஒருவனைப் பற்றி உரைக்க விரும்புகிறேன். அவன் நாலை கிழான் நாகன் என்பவன் ஆவான்.

தான் உதவுகிற வேந்தனுக்கு அவன் படைவீரர்கள் சென்று உதவுவர். போரில் வெல்லும் உபாயங்களை அறிவிப்பான். அவர்