பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


கள் எதைச் செய்து முடிக்கச் சொன்னாலும் தவறாது சென்று முடிப்பான்.

நுகத்தில் பூட்டப்பட்ட எருதுபோல் சளைக்காமல் உழைப்பவன் அவன் நாலை கிழான் நாகன் ஆவான். அவனே பசிக்கு மருத்துவனாக விளங்குகிறான் என்று பலரும் இவனைப் பற்றிக் கூறினர். அவன்பால் செல்க நீ!

‘ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென, ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை மலர்ப்போர் யார்? என வினவலின், மலைந்தோர் விசி பிணி முரசமொடு மண் பல தந்த திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன், படை வேண்டுவழி வாள் உதவியும், வினை வேண்டுவழி அறிவு உதவியும், வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத் தோலா நல்இசை, நாலை கிழவன், பருந்து பசி தீர்க்கும் நற் போர்த் திருந்து வேல் நாகற் கூறினர், பலரே.

திணையும் துறையும் அவை, நாலை கிழவன் நாகனை வடநெடுந் தத்தனார் பாடியது.

180. ஈர்ந்துார் கிழான் தோயன் மாறன்

தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் பெருஞ்செல்வம் அவன்பால் இல்லை; இல்லை என்று சொல்லி அனுப்பும் சிறுமையும் அவனிடம் காண முடியாது.

தன் தலைவனுக்காகப் போர்களில் முன்நின்று வாள்வடு பெறுவான்; மறுபடியும் போர்க்குச் சென்று உதவுவான். இரும்பு சுவை பார்த்த விழுப்புண் ஏற்படுத்திய உடம்பு அவனது; மருந்துச் செடி அது வெட்டப்பட்டு வடுக்கள் தாங்குகின்றது. அதேபோல வடுப் பெற்ற யாக்கையன்.

ஈர்ந்தை என்னும் ஊரில் வாழ்பவன்; பாணர்கள் பசி தீர்க்கும் மருத்துவன் ஆவான்.