உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

205



முதுவாய் இரவலனே! இன்மை தீர வேண்டினால் நீயும் எம்முடன் வருக.

யாம் அவனிடம் சென்று கை தீட்டினால் அவன் கொல் லனிடம் செல்வான். எம் வாடிய வயிற்றைக் காட்டி இவர்களுக்குத் தரத் தனக்கு வேல் வடித்துக் கொடு என்று அவனை இரப்பான்.

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; ‘இல் என மறுக்கும் சிறுமையும் இலனே! இறை உறு விழுமம் தாங்கி, அமரகத்து இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து, மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி, வடு இன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து, ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன் இன்மை தீர வேண்டின், எம்மொடு நீயும் வம்மோ?- முதுவாய் இரவல!யாம் தன் இரக்கும்காலைத் தான் எம் உண்ணா மருங்குல் காட்டித் தன் ஊர்க் கருங் கைக் கொல்லனை இரக்கும், ‘திருந்துஇலை நெடு வேல் வடித்திசின் எனவே.

திணையும் - துறையும் அவை: பாணாற்றுப் படையும் ஆம்.

ஈர்ந்துர் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

181. வலார் கிழான் பண்ணன்

ஊர் மன்றத்தில் விளவின் பழம் உதிர்ந்தால் எயிற்றியின் சிறுவனோடு யானைக் கன்று போட்டி இட்டுக் கொண்டு எடுக்க ஒடும். அத்தகைய அமைதிமிக்க ஊர் வலார்’ என்பது; அதன் தலைவன் பண்ணன்’ என்பான்.

பாணனே உன் சுற்றத்தினர் பசியைப் போக்க வேண்டுமாயின் அவன் பகைப்புலம் நோக்கிச் செல்வதற்கு முன் அவனைச் சென்று காண்க. உன் பசிப்பிணி தீர்க்கும் பரிசில் அவன் தருவான்; விரைவில் செல்க.

மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்,

கருங் கண் எயிற்றி காதல் மகனொடு,