பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



கான இரும் பிடிக் கன்று தலைக் கொள்ளும் பெருங் குறும்பு உடுத்த வன் புல இருக்கைப் புலாஅல் அம்பின், போர் அருங் கடி மிளை, வலா அரோனே, வாய் வாள் பண்ணன்; உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின், இன்னே சென்மதி, நீயே. சென்று, அவன் பகைப் புலம் படரா அளவை, நின் - பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. திணையும் துறையும் அவை, வலார் கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியார்

பாடியது.

182. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி

இந்த உலகம் ஒழுங்காக இயங்குகிறது. அதற்குக் காரணம் ஒரு சிலர் உயர்ந்தோர் வாழ்வதால்தான்.

அவர்கள் இந்திரர்க்குக் கிடைக்கும் அமுதமேயாயினும் தனித்துத் தான் மட்டும் உண்ணார். பிறருக்கும் ஈந்தே உண்பர். அவர்கள் சினந்து பார்க்க முடியாது.

பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி அவற்றைத் தீர்க்க ஒயாது பாடுபடுவர். சோம்பிச் செயலற்றுக் கிடக்க மாட்டார்கள். புகழ் எனின் உயிரும் தந்து அதனைச் செய்து முடிப்பர். இகழ் எனின் இந்த உலகமே அவர்க்குக் கிடைப்பது ஆயினும் அதனைக் கொள்ள மாட்டார். அயர்வு கொள்ளார்.

இத்தகைய மாட்சியுடையராகித் தமக்கு என முயலாமல் பிறர்க்காகவே உழைத்து உதவுபவர் ஆவர்.

இத்தகைய உயர் மாந்தர் இருப்பதால்தான் இந்த உலகம் நல் வழியில் செயல்படுகிறது; இயங்குகிறது; வாழத் தகுதியுடையதாக அமைந்துள்ளது.

உண்டால் அம்ம, இவ் உலகம்-இந்திரர்

அமிழ்தம் இயைவதுஆயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே முனிவு இலர்;

துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்