பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

207



உலகுடன் பெறினும், கொள்ளலர் அயர்விலர்: அன்ன மாட்சி அனையர் ஆகித் தமக்கு என முயலா நோன் தாள், பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.

திணை - பொதுவியல், துறை - பொருண்மொழிக் காஞ்சி. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பாட்டு.

183. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்

ஆசிரியனுக்கு உற்ற உதவிகள் செய்தும், மிக்க பொருள் கொடுத்தும், வழிபாடு செய்தும் கற்றல் நன்மை தருவதாகும்.

ஒரே வயிற்றில் பிறந்த மக்கள் ஆயினும் கல்வி கற்று உயர்ந்தவனாயின் அவனையே தாயும் மதிப்பாள். அவள் மனமும் ஒரு பக்கமே சாயும்.

ஒரே குடியில் பிறந்தவராயினும் கல்விச் சிறப்பால் தக்கவனையே அரசு அழைத்துச் சிறப்புச் செய்வான்; மூத்தவன் என்பதால் முன்னுரிமை தருவது இல்லை. கல்வித் தகுதி பற்றியே அவன் அவர்கள் அறிவுரை கேட்பான். அதை ஏற்று அவன் ஆட்சி செய்வான்.

வேறுபட்டு விளங்கும் நான்கு வகைச் சாதியினருள்ளும் கீழ் சாதிக்காரன் ஒருவன் கற்றவன் ஆயின் மேல் சாதிக்காரன் அவனுக்குப் பணிந்து ஆணை கேட்டு நடப்பான்.

அதனால் கற்பதில் சிரமங்கள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது கற்றல் நல்லது ஆகும்.

உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே: பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும், சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், ‘மூத்தோன் வருக என்னாது, அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்,