பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ரா.சீ. 209 185. தொண்டைமான் இளந்திரையன்

அரசு காவல் ஒருவகையில் பாரம்மிக்க வண்டியை ஒழுங்காகச் செலுத்துவது போன்றதுதான்.

வண்டியின் சக்கரமும் அச்சும் சரியாக வைத்துக் கொண்டு ஒழுங்காக இயக்கினால் அது செல்லும் இடம் ஒழுங்காகப் போய்ச் சேரும்.

ஆட்சியும் அத்தகையதே. ஆட்சி இயந்திரம் சரியாக இயங்க வேண்டும். அனைவர் ஒத்துழைப்பும் பெற வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் வண்டி வழி தவறிச் சிதைந்து விடும். அதுபோல ஆட்சியும் சிதைந்து அழியும்.

பகையாகிய சேற்றில் அகப்பட்டுக் கொண்டு தீய அழிவுகளில் சிக்கித் தடுமாற நேரும்; இடுக்கண்களைச் சந்திக்க நேரும்; தப்ப இயலாது.

ஆட்சியின் சிறப்பு ஆள்வோனைப் பொறுத்து உள்ளது. கால் பார் கோத்து, ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் மாணின், ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே; உய்த்தல் தேற்றான்.ஆயின், வைகலும், பகைக் கூழ் அள்ளற் பட்டு, மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.

திணை - பொதுவியல், துறை - பொருண்மொழிக் காஞ்சி.

தொண்டைமான் இளந்திரையன் பாட்டு.

186. மோசி கீரனார்

மக்களுக்கு உணவாகிய நெல்லும் நீரும்தான் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதன என்று கூற முடியாது.

நெல்லும் உயிரன்று; நீரும் உயிரன்று; மன்னன்தான் மக்களுக்கு உயிராவான். அதனால் மக்களுக்குத் தான் உயிர் என்பதை அறிந்து செயல்படுதல் வேல்மிகு சேனைகளை உடைய அரசனுக்குக் கடமையாகும். மக்கள் வாழ்க்கைக்கு அரசன் உயிர் போன்றவன் ஆவான். -