பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே: மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்: அதனால், யான் உயிர் என்பது அறிகை வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே. திணையும் துறையும் அவை, மோசிகீரனார் பாடியது.

187. ஒளவையார்

நிலமே நீ ஒரு பகுதியில் நாடாக விளங்குகிறாய். மற்றொரு பகுதியில் காடாக விளங்குகிறாய்.

ஒரு பகுதியில் பள்ளமாக இருக்கிறாய். ஒரு பகுதியில் மேடாக இருக்கிறாய்.

இந் நில அமைப்புகளில் வேறுபாடுகள் உள்ளன. அவற்றை வைத்துக் கொண்டு எதையும் நல்லது, தீயது என்று கூற முடியாது. நிலப்பகுதி எதுவாயினும் எங்கே நல்லவர்கள் இருக்கின்றார் களோ அது நல்லது என்று கூற முடியும்.

நிலம் அடிப்படையன்று; மக்கள் அவர்களை வைத்துத்தான் நாட்டின் நன்மை, தீமைகள் அமைகின்றன.

நாடு ஆகு ஒன்றோ காடு ஆகு ஒன்றோ அவல் ஆகு ஒன்றோ மிசை ஆகு ஒன்றோ எவ் வழி நல்லவர் ஆடவர், அவ் வழி நல்லை; வாழிய நிலனே!

திணையும் துறையும் அவை. ஒளவையார் பாடியது.

188. பாண்டியன் அறிவுடைநம்பி

குறுகுறு என்று நடந்தும், சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும், நெய் கலந்த சோறு உடம்பெல்லாம் விதிர் விதிர்த்து மகிழ்வு தருவர் மக்கள்.

மக்கள் மகிழ்வு தருகின்றனர். அவர்களைப் பெறாதவர் மிகப் பல செல்வம் படைத்தவர் ஆயினும் அவர்கள் வாழ்க்கை பொருளற்றதாகி விடுகிறது.