பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

211



- படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் -

உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக் குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும், மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக் குறை இல்லைத் தாம் வாழும் நாளே.

திணையும் துறையும் அவை. பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.

189. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

வாழ்க்கையில் இரு எல்லைகள்; ஒருவன் பேரரசன், பல நாடு களையும் தனக்கே உரிமையாக்க ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைக்கிறான்.

மற்றோர் எல்லை; காட்டிலே வேடுவன்; விலங்குகளைத் தேடி அலைகிறான். இரவிலும் தூக்கமின்றிச் சுற்றி அலைகிறான். இவன் கல்வி கல்லாதவன்.

இருவருக்கும் உணவு, உடை, இருக்கை இவை பொது. அவனுக்கும் மேலாடை ஒன்று; இடுப்புக்கு ஒர் ஆடை. இவனுக்கும் அவையேதான். உண்பதிலும் உடுப்பதிலும் மிக்க வேறுபாடு இல்லை.

செல்வம் படைத்தவர் செய்யத் தக்கது ஒன்று உள்ளது: பிறர்க்கு ஈதல் அதனைச் செய்ய அவர்களால் இயலும். அதுவே அவர்களை வேறுபடுத்திக் காட்டும்; உயர்வு தருவதும் ஆகும்.

செல்வ வாழ்க்கையின் பயன் ஈதல்; நாமே உண்போம் என்றால் அவை தவறுவதற்கும் காரணங்கள் பல சேர்ந்து விடும்.

தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும், நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,