பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



உண்பது நாழி, உடுப்பவை இரண்டே, பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம்எனினே, தப்புந பலவே.

திணையும் துறையும் அவை,

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

190. சோழன் நல்லுருத்திரன்

விளையும் இடம் சிறிது ஆயினும் அங்கு எல்லாம் சென்று வளைந்த கதிரிடத்துச் சிறுகச் சிறுகத் தம் வளையில் எலி அரிசி கொண்டு சேர்க்கிறது; சேமித்து வைக்கிறது. இது ஒரு வாழ்க்கை. இந்தச் சிற்றெலி போலச் சிறு முயற்சிகள் செய்து சிக்கனமாக வாழ்பவர் உள்ளனர். பிறர்க்கு ஈதல் இன்றி இறுக்கிப் பிடிப்பர்.

இவர்களோடு தொடர்பு கொள்வது பயனற்றதாகும். தறுகண்மையை உடைய காட்டுப் பன்றியைப் புலி வீழ்த்து கிறது. அது இடப்பக்கம் சாய்ந்தால் அதனைத் தொட்டு உண்ணாது.

மறுநாள் பசித்திருந்து யானையை வலப்பக்கத்தில் வீழ்த்தி அதனை உண்பதில் அது மகிழ்வு காண்கிறது.

இத்தகைய மெலிவு நீங்கிய உள்ளத்தவரோடு எம் கேண்மை பொருந்துவதாக

விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர் வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும் எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம் வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு இயைந்த கேண்மை இல்லாகியரோ! கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென, அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள், பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து, இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து