பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


தீமைகள் நன்மைகள் இவற்றைப் பெரும்பாலும் நாமே விளைவித்துக் கொள்கிறோம். பிறர் தருவது மிகுதியாக இல்லை; நம் செயற்பாட்டை ஒட்டியே நன்மைகளும் தீமைகளும் வந்து சேர்கின்றன.

துன்பம் அதனால் பாதிப்பும் அது தணிந்து வாழ்தலும் அவற்றைப் போன்றவையே. அவையும் தாமே வருவன; பிறர் தருவன அல்ல.

சாதல் என்பது புதிய நிகழ்ச்சி அன்று. நடவாதது நடந்து விட்டது என்று அதைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை. வருந்தவும் தேவை இல்லை.

வாழ்தல் இனிமை தருவது என்று நினைத்துக் கொண்டு அதில் ஆழ்வதும் இல்லை. இன்பமும் ஒரு மயக்கமே, போதை தருவது. அதனால் அறிவு மங்குவதற்கு அது காரணமாகிவிடும். மேல் முயற்சி இன்றிச் சோம்பலிலும் உய்த்துவிடும். இன்பம் அது நம்மைத் தளைப்படுத்தி விடும். செயற்பாட்டைக் குறைத்துவிடும்.

வாழ்க்கையை வெறுப்பதும் இல்லை. இது இனிமையற்றது என்று வெறுத்துக் கூறுவதும் இல்லை.

வாழ்க்கை எப்படி அமைகிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை; தக்கது ஆகும்.

ஆற்று நீர் வெள்ளம் அதில் மிதக்கும் படகு அதன் ஒட்டத்தில் செல்கிறது; வாழ்க்கை இயக்கத்தில் நாமும் மிதந்து செல்கிறோம். அவ்வளவுதான். உயிர்வாழ்க்கை சில ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டது. அவற்றை விட்டு நாம் விலகிச் செல்ல முடியாது. இதுதான் வாழ்க்கை நெறி என்பதை அறிஞர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். தெளிவான சிந்தைனையுடன் வாழ்கிறோம்.

பெரியவர்களைக் கண்டு அவர்கள் சாதனையை வியந்து கொண்டிருப்பதும் இல்லை. சிறியோர்கள் எதையும் சாதிக்காத வர்கள் என்று கூறி அவர்களை இழித்துக் கூறுவதும் இல்லை; பெருமைக்கும் சிறுமைக்கும் அவர்கள் பெற்றிருக்கும் சூழ்நிலை களே காரணம் ஆகின்றன. தனிமனிதரை உயர்த்திப் பேசுவதும்