பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

215


தாழ்த்திப் பேசுவதும் தக்கது அன்று. அனைவரையும் சமமாக மதிப்பதே தக்கது ஆகும். மனிதநேயம் நாம் போற்றத் தக்கது ஆகும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின், இன்னாது என்றலும் இலமே, ‘மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர் விழிப்படுஉம் புணை போல், ஆர் உயிர் முறை வழிப்படுஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

திணையும் துறையும் அவை, கணியன் பூங்குன்றன் பாட்டு.

193. ஒரேர் உழவர்

தோலை உரித்து அதனைப் புறம் கீழாக இட்டுப் பரப்பி வைத்தது போன்ற வெண் களர் நிலம்: வேடுவன் ஒருவன் மான் ஒன்றைத் துரத்துகிறான்; வழியில் அதனைத் தடுக்கத் தடை ஏதும் இல்லை; தளையும் இல்லை; அதனால் அது வேகமாக ஒடித் தப்பித்துக் கொள்கிறது. வழவழப்பான நிலம் அது.

வாழ்க்கையும் அப்படித்தான். மனைவி மக்கள் சுற்றம் இல்லாதவர்கள் துன்பங்கள் துரத்தும்போது ஓடிவிட முடியும்.

மற்றவர்களைப் பந்தபாசங்கள், குடும்பப் பொறுப்புகள் தளைப்படுத்துகின்றன. அவர்கள் நின்று நிலைத்துப் போராடி வெற்றி காண்பதே செய்யத்தக்கதாகும்.

அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின் ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,