பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



ஓடி உய்தலும் கூடும்மன், ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.

திணையும் துறையும் அவை. ஓரேருழவர் பாட்டு

194. பக்குடுக்கை நன்கணியார்

ஒரு வீட்டில் நெய்தற் பறை இரக்க உணர்வை வெளிப்படுத்த ஒலிக்கிறது. சாவு அதன் விளைவு அது.

மற்றொரு வீட்டில் குளிர்ச்சி தரும் முழவு பண்ணோடு இசைக்கிறது. மகிழ்ச்சியை அது தெரிவிக்கிறது. அது மண முழக்கம்.

மண வாழ்க்கையை உடையவர் தம் தலைவரோடு வாழ்ந்து மலர்ச்சி பெறுகின்றனர். இன்பம் அடைகின்றனர். மகிழ்வுடன் வாழ்கின்றனர். கணவனைப் பிரிந்து வாழ்பவர் பொலிவிழந்து வாடுகின்றனர்.

இவ்வாறு ஒரு சிலர் மகிழ்வும் அதே சமயத்தில் ஒரு சிலர் துன்பப்பட்டும் வாழ வகுத்துத் தந்த படைப்புக் கடவுள் பண்பு இல்லாதவன் என்றுதான் கூற முடியும்.

இதைக் கண்டு தத்துவம் பேசிக் கொண்டு ஒதுங்கி வாழ்வது தக்கது அன்று

இதில் இனிமையை நீ படைக்கப் பாடுபடுவதே தக்கது ஆகும்.

ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல் ஈர்ந் தண் முழவின் பாணி ததும்பப், புணர்ந்தோர் பூ அணி அணியப், பிரிந்தோர் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்பப், படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்! இன்னாது அம்ம, இவ் உலகம்; இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.

திணை - அது; துறை - பெருங் காஞ்சி. பக்குடுக்கை நன்கணியார் பாடியது.