பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

217



195. நரிவெரூஉத் தலையார்

சால்புமிக்க மூதறிவாளர்களே கயல்மீன் போன்று நரை பெற்று முதிர்ந்த யாக்கை பெற்றுள்ளீர். பயனில்லாத வாழ்வு வாழ்ந்து மூப்பினை அடைந்துள்ளர்.

எந்த உயர் நோக்கமும் இல்லாமல் வாழ்கிறீர்கள். இறுதிக் காலத்தில் அதற்காக வருந்துவீர்கள்; கூற்றுவன் வந்து உம்மை அழைத்துச் செல்ல வருவான். அவன் உங்களைப் பிணித்து இழுத்துச் செல்லும்போது வருந்துவீர். எந்த நன்மையும் யாம் செய்யாமல் இருந்து வீணே கழித்து விட்டோமே என்று வருந்துவீர்.

இனி மூப்பு அதனால் எந்த நன்மையும் செய்ய இயலாது என்று நீங்கள் பேசித் தப்பித்துக் கொள்ள நினைக்கலாம்.

உங்களால் எந்தவித நன்மையும் பிறர்க்குச் செய்ய இயலவில்லை என்றாலும் மற்றவர்களுக்குத் தீமை இழைக்காதீர் அதுவே போதுமானது. நல்ல நெறியும் ஆகும்.

பல் சான்றீரே பல் சான்றீரே! கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள், பயன் இல் மூப்பின், பல் சான்றீரே! கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன் பிணிக்கும்காலை, இரங்குவிர் மாதோ, நல்லது செய்தல் ஆற்றீர்ஆயினும், அல்லது செய்தல் ஒம்புமின்; அதுதான் எல்லாரும் உவப்பது அன்றியும், நல் ஆற்றுப் படுஉம் நெறியும்மார் அதுவே.

திணை - அது துறை - பொருண் மொழிக் காஞ்சி. நரிவெரூஉத்தலையார் பாடியது.

196. பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறன்

உண்டு இல்லை என்பதைத் தெளிவாகக் கூறிவிடு. அதுதான் உனக்கும் நல்லது; எங்களுக்கும் நல்லது.