பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


இரண்டும் கெட்ட நிலையில் நீ எதுவும் கூறாமல் மழுப்புகிறாய்.

என் வீடு மிக்க வறுமையில் சூழ்ந்துள்ளது.வெறும் காற்றுத் தடுப்பாக உள்ளது; அவ்வளவுதான். என் காதல் மனைவி நாணமும் பேணிய கற்பும் துணையாக எனக்காகக் காத்து இருக்கிறாள். அவளுக்கு யான் பொருள் கொண்டு செல்ல வேண்டும்.

வெய்யில் என்று ஒதுங்க முடியாது. பனி என்று பதுங்க முடியாது. எங்காவது யாரையாவது கண்டு பொருள் பெற்றுத் தான் செல்ல வேண்டும்.

கல் நெஞ்சன் நீ ஈயாது இருத்தல் எங்களையும் வாட்டுக்கிறது; உன்னையும் தாழ்த்துகிறது. நீயும் உன் மக்களும் நன்றாக வாழுங்கள்; அது போதும். மற்றவர்களைப் பற்றி நீ எந்தக் கவலையும் கொள்ளத் தேவை இல்லை.

யான் என் பிழைப்பைத் தேடிச் செல்கிறேன். வறுமை தீரச் சுற்றி அலைவேன்; சென்று வருகிறேன்; நீ வாழ்க.

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும், ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர் புகழ் குறைபடுஉம் வாயில்அத்தை அனைத்து ஆகியர், இனி, இதுவே எனைத்தும் சேய்த்துக் காணாது கண்டனம், அதனால், நோய் இலராக நின் புதல்வர் யானும், வெயில் என முனியேன், பனி என மடியேன், கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை, நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல் மெல் இயல் குறு மகள் உள்ளிச் செல்வல்அத்தை சிறக்க, நின் நாளே!

திணை - பாடாண் திணை, துறை - பரிசில் கடா நிலை.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.