பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

219



197. சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன்

காற்றினும் வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தேரினர் என்றோ, யானைகள் மிக்குள்ள படை வீரர்களைக் கொண்டவர் என்றோ, வெற்றிகள் கொண்டு முரசு கொட்டுபவர் என்றோ அரசர்களின் வலிமையையும், ஆற்றலையும், வெற்றிகளையும் யாம் புகழ்ந்து பேசுவது இல்லை.

மிகப் பெருந்துன்பம் வந்து எங்களை வாட்டினாலும் எம்பால் பரிவு காட்டத் தக்க நல்லுணர்வு இல்லாதவருடைய செல்வத்தை நினைக்கவும் மாட்டோம். நல்ல அறிவு உடையோம்.

முள்வேலி இட்ட தோட்டத்துள் ஆடுகள் மேய்ந்து தின்று விட்டு எஞ்சியுள்ள முஞ்ஞைக் கீரைக் களியோடு வரகுசோறு தந்து எங்களை உபசரிக்கும் சிறிய ஊர்க்கு மன்னன் ஆயினும் எம்மிடத்து எம்பெருமையை மதித்து நடப்பவரையே யாம் மதிப்போம்; அவர்கள் இல்லம் மிதிப்போம்.

எளியவர் ஆயினும் அவர்கள் நல்குரவினை மதிப்போம்; அவர்கள் வறுமையில் செம்மை உடையவர் என்பதால் அவர்களை நினைப்போம்.

வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅக், கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ, உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு செரு மேம்படுஉம் வென்றியர் எனாஅ, மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர் வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே, எம்மால் வியக்கப்படுஉமோரே இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு, புன் புல வரகின் சொன்றியொடு, பெறுஉம், சீறுர் மன்னர்ஆயினும், எம் வயின் பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே,