பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும் உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்; நல் அறிவு உடையோர் நல்குரவு உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே.

திணையும் துறையும் அவை. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

198. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்

நீயும் நின் மனைவி மக்களும் வாழ்க என்று கனவிலும் உன்னையே வாழ்த்திக் கொண்டிருக்கிறேன். ஆலிலைமேல் பள்ளி கொள்ளும் திருமாலைப் போல நீ செல்வம் பெற்று வாழ்கிறாய் அதனைக் கண்டு மகிழ்கிறேன்.

நின் மக்களும் நின்னைப் போல் பல நாடுகளையும் வென்று உயர்வாராக. அந்நாடுகளில் உள்ள செல்வத்தைக் கொண்டு வந்து சேர்ப்பித்துப் பெருஞ் செல்வர் ஆவார் ஆகுக. அவர்களும் ஈகைத் தன்மையில் தம் முன்னோர்களைப் போல விளங்குவாராக.

நீயும் மிக்க செல்வத்தோடு வாழ்ந்து புகழ் இனிது விளங்க நீடுக வாழ்க! உன் மைந்தர்களோடும் பெயரர்களோடும் கடல் நீரைவிடவும் நீண்ட நாள் வாழ்வாயாக.

இவர் பெறும் புதல்வர்கள் உன் பெயரர்கள்; அவர்களைக் காணுந்தோறும் நீ பெருமகிழ்வு அடைவாயாக ! நீயும் மிக்க செல்வத்தோடு வாழ்ந்து புகழ் இனிது விளங்க நீடு வாழ்க!

யானும் முன்பின் அறியாத தேயங்களுக்குச் சென்று வாழ்வேன். அங்கு இருந்தபோதும் உன் அடியுறை வாழ்வை நினைத்து வானத்தின் மழைத் துளியை எதிர்நோக்கும் வானம்பாடி என்னும் பறவைபோல் வாழ்ந்து வருவேன். நீ என்னை மறவாமல் இருந்தால் அதுவே போதுமானது.

‘அருவி தாழ்ந்த பெரு வரை போல ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டாக்,