பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

223



பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் கனி கவர்ந்து உண்ட கரு விரற் கடுவன் செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி, மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்துக்,

கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல், களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை, விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே! இவரே. பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை நாத் தழும்பு இருப்பப் பாடாது.ஆயினும், ‘கறங்கு மணி நெடுந் தேர் கொள்க! எனக் கொடுத்த பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்; யானே, பரிசிலன், மன்னும் அந்தணன், நீயே, வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்; நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி-சினப் போர் அடங்கா மன்னரை அடக்கும் மடங்கா விளையுள் நாடு கிழவோயே! திணை - அது துறை - பரிசில் 5. பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.

201. இருங்கோ வேள்

இவர் யார் என்று வினவுவாய் ஆயின் இவர்கள் தன் ஊர்களை இரவலர்க்கு அளித்தும், தன் தேரினை முல்லைக் கொடிக்கு ஈந்தும் புகழ் ஈட்டியவனும் பறம்பு மலைத் தலைவனும் ஆகிய பாரி மகளிர் ஆவர்.

யானே இவர் தந்தைக்குத் தோழன்; இவர் என் பாதுகாப்பில் உள்ளனர். அதனால் என் மகளிர் ஆகின்றனர்; அந்தணன் புலவன் யான் அழைத்துக் கொண்டு வந்துள்ளேன்.

நீயே வடக்கே ஒரு முனிவன் வளர்த்த ஒம குண்டலத்தில் தோன்றிய உயர் பிறப்பாளன். செம்பினால் இயன்ற மதிலை உடைய துவரை நகரை நாற்பத்து ஒன்பது தலைமுறையாக ஆண்டு வரும் வேளிருள் ஒருவன்; வேளிர் குலத் தலைவன் ஆவாய்.