பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


பாணர்களுக்குக் கொடை தந்து சிறப்புச் செய்யும் கொடையாளன்; புலிகடிமால், யான் இவர்களை மணத்தில் தர நீ இவர்களை ஏற்றுக் கொள்வாயாக மலை நாட்டுக்குத் தலைவன் நீ படைகள் மிக்கு உடைய அரசன் ஆவாய்.

‘இவர் யார்?’ என்குவைஆயின், இவரே, ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன் முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசைப், படு மணி யானைப், பறம்பின் கோமான் நெடு மாப் பாரி மகளிர் யானே தந்தை தோழன்; இவர் என் மகளிர்; அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே. நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச், செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, உவரா ஈகைத் துவரை ஆண்டு, நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே! விறற் போர் அண்ணல்! தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே! ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்! யான் தர, இவரைக் கொண்மதி!-வான் கவித்து இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல் பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல் உடலுநர் உட்கும் தானைக், கெடல் அருங்குரைய நாடு கிழவோயே!

திணையும் துறையும் அவை. பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.

202. இருங்கோ வேள்

புலிகடிமால் உன் நாட்டில் உள்ள வளம்மிக்க ஊர்கள் அழிவுபட்டன; அது ஏன் தெரியுமா? சிற்றரையம், பேர் அரையம் எனும் அவ்வூர்கள் பொன்னும் மணியும் கொழித்து வேண்டிய செல்வம் உமக்கு அளித்து வந்தன. அவை கேடுற்று அழிந்து விட்டன. அதற்குக் காரணம் உன்னைப் போல் உம்மவருள்