பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

225



அறிவற்ற ஒருவன் கழாஅத்தலையார் என்னும் புலவரை இகழ்ந்தமையே!

யானும் எவ்வி குடியில் பிறந்த பாரி மகளிரைப் பற்றி உன்னிடம் பேசினேன்; அது தவறு; பொறுத்துக் கொள்.

வேங்கைப் பூ போர்த்தலால் உன் மலை நாட்டில் பாறைக் கற்கள் வரிகளையுடைய புலிபோலத் தோற்றம் அளிக்கின்றன. அத்தகைய நாட்டுக்கு உரிய தலைவன் நீ யானும் உன் புறத்தோற்றம் கண்டு மயங்கி விட்டேன்.

புலவரை இகழ்ந்தவர் என்றும் சிறப்புற வாழ்ந்தது இல்லை. இதைமட்டும் கூறிவிட்டு யான் செல்கின்றேன். நீ நன்கு

வாழ்வாயாக.

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக் கட்சி காணாக் கடமா நல் ஏறு கடறு மணி கிளரச் சிதறு பொன் மிளிரக், கடிய கதழும் நெடு வரைப் படப்பை வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்க், கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி: நுந்தை தாயம் நிறைவுற எய்திய ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்! நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் புகழ்ந்த செய்யுட் கழாஅத்தலையை இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல்! எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று. இவர் கை வண் பாரி மகளிர் என்ற என் தேற்றாப் புன்சொல் நோற்றிசின் பெரும! விடுத்தனென்; வெலிஇயர், நின் வேலே! அடுக்கத்து, அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல் இரும் புலி வரிப் புறம் கடுக்கும் பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே!

தினையும் துறையும் அவை. இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது.