பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


203. சோழன் பாமுளுர் எறிந்த நெய்தலங்

கானல் இளஞ்சேட்சென்னி

ஏற்கெனவே பெய்துவிட்டதால் மழை திரும்பப் பெய்யாமல் இருப்பது இல்லை; அது பெய்ய மறுப்பதும் இல்லை. அதே போல் விளைவு தந்து விட்டேன்; மறுபடியும் விளைவு தரமாட்டேன் என்று நிலம் மறுப்பதும் இல்லை.

மழையும் நிலமும் ஏற்கெனவே தந்து விட்டதாகக் கூறி மறுத்து விட்டால் உயிர் வாழ்க்கையே இருக்காது. மக்கள் உயிர் வாழ முடியாது.

புலவர்கள் வாழ்க்கையும் அத்தகையதே. ஏற்கெனவே தந்து விட்டேன் என்று மறுத்துக் கூறி விட்டால் அவர்கள் வாழ்க்கை பட்டுப்போகும். வாடி வருந்துவர்.

ஏற்பவருக்கு வறுமை என்றால் அதனால் விளையும் கொடுமை மிகவும் சிறியது. அதைவிட மறுப்பவருக்கும் ஒர் இழப்பு உண்டு. புலவர்கள் யாரும் அவர்களை விரும்ப மாட்டார்கள். அவர்களை நினைக்கவும் மாட்டார்கள். அந்த இழப்பு மிகப் பெரிது. இதனை நீ கருத்தில் கொள்க!

பகைவர் நாட்டின் மீது படை எடுக்கும் முன்பே அவர் நாட்டை உன் உடைமை ஆக்க முடியும் என்ற உறுதி உன்பால் உள்ளது. புலவர்களை மதித்து அவர்களுக்கு நல்குவதைச் சிறந்த கடமையாகக் கொள்க.

‘கழிந்தது பொழிந்து என வான் கண்மாறினும், தொல்லது விளைந்து என நிலம் வளம் கரப்பினும், எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை; ‘இன்னும் தம் என எம்மனோர் இரப்பின், ‘முன்னும் கொண்டிர் என, நும்மனோர் மறுத்தல் இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல்! இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும், உள்ளி வருநர் நசை இழப்போரே, அனையையும் அல்லை, நீயே, ஒன்னார் ஆர் எயில் அவர்கட்டாகவும், நுமது எனப்