பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

227



பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்! பூண் கடன், எந்தை நீ இரவலர்ப் புரவே.

திணையும் துறையும் அவை. சேரமான் பாமுளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி

பசுங்குடையார் பாடியது.

204. வல்வில் ஒரி

தருக என்று கை நீட்டுவது ஒருவனுக்கு இழிவு தருவதாகும். கேட்ட பிறகு கொடுக்காமல் இருப்பது அதைவிடத் தாழ்மையானது.

வேறு வகையாகச் சொன்னால் கொள் எனக் கொடுப்பது உயர்வானது; கொடுத்தாலும் அதை ஏற்க மறுப்பது அதைவிட உயர்வானது.

உப்புக் கரிக்கும் கடல் நீர் அளவில் மிக்கது. அதனை நாடி ஒருவரும் நீர் வேட்கைக்குச் செல்வது இல்லை.

பசுவும் மற்றைய விலங்குகளும் சென்று சேறாக்கிவிடும் சிறு நீர்த் தேக்கம் என்றாலும் அதை நோக்கிப் பலரும் செல்வர்; குடிநீர் அதற்கு வழிகள் பல தானாக அமைந்து விடுகின்றன.

வள்ளியோரை நாடி உள்ளி அவர் தருவார் என்று கருதிச் செல்கின்றனர். அது தேய்ந்த பாதை. தப்பித் தவறி அங்கு எதிர்பார்த்த பரிசில் கிடைக்கவில்லை என்றாலும் அப்பரிசில் தரும் மேன் மக்களைக் குறைவு படப் பேசமாட்டார்கள்.

வழங்குபவரைக் குறை கூறுவது இல்லை. தம் சகுனம் சரி இல்லை என்று தம்மைத் தாமே தேற்றிக் கொள்வர். தாம் சென்ற நேரம் சரி அல்ல என்றுதான் பேசுவார்கள்.

மாரி போல வாரி வழங்கும் இயல்பு உன்பால் உள்ளது; அதனால் எப்பொழுதும் உன்னை வெறுப்பது என்பது இல்லை.

‘ஈ’ என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர், ‘ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று: கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர், கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று: