பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல் உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே, ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச், சேற்றொடு பட்ட சிறுமைத்து.ஆயினும், உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்; புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால், புலவேன்- வாழியர், ஓரி! விசும்பில் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

திணையும் துறையும் அவை.

வல்வில் ஒரியைக் கழைதின்யானையார் ப்டியது.

205. கடிய நெடு வேட்டுவன்

செல்வம் மிக்குப் படைத்த மூவேந்தர் என்றாலும் அவர்கள் விருப்பு இன்றித் தருவாரேயானால் அதனை யாம் வேண்டேம்; ஏற்கவும் மாட்டோம்.

செறுவரைச் சிதைக்கும் சேனையை உடையவன் நீ! முல்லைச் செடிகளை வேலியாக உடைய கோடை என்னும் சிற்றுருக்குத் தலைவன் நீ; வேகமாகப் பாய்ந்து செல்லும் நாய் கொண்டு மான் கணங்களை வேட்டையாடும் தலைவன் நீ; நோய் இன்றி வாழ்வாயாக!

என்றாலும் உன்னை யாம் நேசிக்கிறோம். துணிந்து யாசிக்கிறோம்; எங்கள்பால் நீ பரிவு காட்டுகிறாய்; விருப்புடன் தரும் உள்ளம் படைத்தவன்; அதனால் உன்னை யாம் வலியச் சூழ்ந்து பரிசில் பெற்றுக் கொள்வோம். நீ தரும் வரை உன்னை விடாமல் வளைத்துக் கொள்வோம்.

கடலை நோக்கி இடியுடன் செல்லும் மேகங்கள நீர் இன்றித் திரும்புவது இல்லை. அதுபோல உன்னிடம் யாம் வந்தால் வறிதே திரும்புவது இல்லை. நீ நோயில்லாமல் வாழ்க!

முற்றிய திருவின் மூவர் ஆயினும், பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே;