பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

229



விறற் சினம் தணிந்த விரை பரிப் புரவி உறுவர் செல் சார்வு ஆகிச் செறுவர் தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை, வெள் வீ வேலிக் கோடைப் பொருந: சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய், நோன் சிலை, வேட்டுவ நோய் இலையாகுக! ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்துக் கடல்வயின் குழிஇய அண்ணல்அம் கொண்மூ நீர் இன்று பெயராவாங்குத் தேரொடு ஒளிறு மருப்பு ஏந்திய செம்மற் களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே,

திணையும் துறையும் அவை, கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

206. அதியமான் நெடுமான் அஞ்சி

வள்ளல்களை அணுகி அவர் செவிகளில் எம் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துக் கூறிப் பரிசுக்காகக் காத்து நிற்பது எம் தொழில். இச் செய்தியை வாயில் காப்பவனே உன் தலைவன் அதியமான் அஞ்சிக்கு எடுத்து உரைப்பாயாக.

பரிசிலர்க்கு எந்நாளும் அதியன் வாயில் அடைத்தது இல்லை. அத்தகைய சிறப்புடைய அரசுக்கு வாயிலோன் நீ.

அவன் தன்னையே மறந்த நிலையில் அசதியாக உள்ளானோ யாம் வந்தது குறித்து ஆராயாமல் இருக்கிறானோ தெரியவில்லை; அதியனை நம்பித்தான் இவ்வுலகில் அகதிகள் வாழ்கின்றார்கள் என்ற நினைப்புப் போலும்.

இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து விடவில்லை. இந்த உலகம் வெற்றிடமாகி விடவில்லை. எங்களை அறிந்து பரிசில் தரப் பலபேர் உள்ளனர். யாம் எம் இசைக் கருவிகளைச் சுருக்கிட்டுப் பையில் இட்டு எடுத்துக் கொண்டோம்.

மரம் வெட்டும் தச்சுத் தொழில் தெரிந்தவன்; அக்குடும்பத் தில் பிறந்து வளர்ந்தவன்; கையில் கோடரி உள்ளது. அவன் எந்தக்