பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

249


227. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய

கிள்ளி வளவன்

கூற்றமே! நல்லது எது கெட்டது எது என்று அறியாத மடமை நின்பால் உள்ளது. உன் அறிவு குறைந்து விட்டது. விதைக்காக வைத்திருக்கும் நெல்லை உண்டு விட்டாய். நான் சொல்வது நன்கு விளங்கவில்லையா? விளக்குகிறேன் கேள்.

இதுவரை இவன் யானை குதிரை காலாள் இப்படைகளைக் கொன்று குவித்தான்; வீரர்களையும் அவித்தான். நின்னை வாட்டும் பசியை இவன் இவ்வுயிர்களை அழித்து ஆற்றி வந்தான். நீ செய்ய வேண்டிய தொழிலை இவனே செய்து முடித்தான். இனி யார் உன் பழியைத் தீர்ப்பார். ஆற்றல்மிக்க அடுநனை நீ உன்னுடன் கொண்டு விட்டாயே!

நனி பேதையே, நயன் இல் கூற்றம்! விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை, இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்; ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும், குருதி அம் குரூஉப் புனற் பொரு களத்து ஒழிய, நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின் வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல் நின் ஓர் அன்ன பொன் இயற் பெரும் பூண் வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி இனையோற் கொண்டனை ஆயின், இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே?

திணையும் துறையும் அவை, அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.

228. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

இம்மூதூரில் தாழி செய்யும் வேட்கோவே, சோழ அரசன்

மண்ணுலக வாழ்க்கை நீத்து அவன் தேவர் உலகத்தை அடைந்து விட்டான்.