பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

புறநானூறு செய்யுளும் செய்திகளும்

சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்? என, இன் இசைப் பறையொடு வென்றி நுவலக், துக்குணங்குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப ஒரு சிறைக் கொளிஇய திரி வாய் வலம்புரி, ஞாலங் காவலர் கடைத்தலைக், காலைத் தோன்றினும் நோகோ யானே.

திணையும் துறையும் அவை. சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.

226. சோழன் குளமுற்றத் துஞ்சிய கிள்ளி வளவன்

மிக்கு எழுந்த போரில் வெற்றிகள் காணும் சேனையை

உடைய திண்தேர் வளவனைக் கூற்றம் உயிர் கொண்டு விட்டது.

அது நிச்சயமாக நேரில் சென்று அவன் உயிரை வாங்கி

இருக்க முடியாது. சினமோ, வெறுப்போ காட்டி முன் சென்று அவனைப் பணிய வைத்து அவன் உயிரை வாங்கி இருக்க

முடியாது.

பாடுபவரைப் போலச் சென்று கை தொழுது ஏத்தி

இரந்துதான் அவன் உயிரைப் பெற்றிருக்க வேண்டும்.

போரில் அவனை யாரும் வெல்ல முடியாது. இரந்துதான்

உயிர்ப் பிச்சை கேட்டிருக்க முடியும்.

செற்றன்றுஆயினும், செயிர்த்தன்று ஆயினும், உற்றன்றுஆயினும், உய்வு இன்றுமாதோ, பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி, இரந்தன்றாகல் வேண்டும்- பொலந் தார் மண்டு அமர் கடக்கும் தானைத் திண் தேர் வளவற் கொண்ட கூற்றே.

திணையும் துறையும் அவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை மாறோக்கத்து நப்பசலையார்

பாடியது.