பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

247



225. சோழன் நலங்கிள்ளி

சோழன் நலங்கிள்ளியின் படைப் பெருமையை நுவல வேண்டுமா?

தலைப் படையினர் பனம் துங்கின் இனிய நீரைப் பருகுவர். இடைப் படையினர் பழத்தின் கனிந்த பகுதியை உண்பர். கடைப் படையினர் பனங்கிழங்கு சுடப்பட்டது அதனைப் பிய்த்து உண்பர். நீள் படை அவனுடையது. ஆற்றல் மிக்கது அவன் படை அது நடந்து சென்றால் காலம் நீட்டிக்கும்.

அத்தகைய பெரும் படையைப் படைத்தவன் இன்று கள்ளி முளைத்துள்ள களர் நிலம்: முள்ளுடைய இடுகாடு அதில் அவன் உறங்குகிறான். அவன் கிடத்தப்பட்டுள்ளான்.

நலங்கிள்ளி வாழ்ந்த காலத்தில் ஞாலம் காவலர் பொழுது விடிந்தால் இன்னிசைப் பறை கொண்டு இசைப்பதையும், தூக்கணங்குருவியின் கூட்டைப் போன்ற வலம்புரிச் சங்கை முழங்குவதையும் தவிர்த்தனர். இவ்விசை ஒலிகள் அவன் செவியில் பட்டால் அவன் எழுந்து வருவான்; படை கொண்டு தாக்குவான் என்று அஞ்சி இருந்தனர்.

அவன் மறைந்த பிறகு இப்பறையும் சங்கும் எங்காவது பள்ளி எழுச்சிகளில் எழுப்பினால் அவை என் நெஞ்சை நடுக்குறச் செய்கின்றன. அவன் நினைவுகள் தோன்றி என்னை அழிக் கின்றன. வீரன் ஒருவன் அவன் மறைவு அதனை நினைவுப் படுத்துகிறது.

தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய, இடையோர் பழத்தின் பைங் கனி மாந்தக், கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர, நில மலர் வையத்து வல முறை வளைஇ. வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு, ஆற்றல் என்பதன் தோற்றம் கேள், இனிக், கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, முள்ளுடை வியன் காட்டதுவே-நன்றும்