பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



பாணர்தம் பசி தீர்த்தவன்; அவர்கள் அருந்தக் கள் ஈந்தான். அச் சுற்றத்தினர்தம் வறுமையைப் போக்கி வளமான வாழ்வு அளித்தான்.

மறையவர்கள் காட்டிய வழி நின்று தம் குல மகளிரோடு நலம் பயக்கும் வேள்விகளை நடத்தினான். அவற்றின் நினைவுச் சின்னமாகத் தூண்கள் பல எழுப்பினான்.

சாதனை மிக்க வாழ்வு; அது சரித்திரம் கண்டது. சாவு அவனை இழுத்துக் கொண்டது. அமர வாழ்வு அவனை அணைத்துக் கொண்டது.

அவன் உரிமை மகளிர், பசுக்களுக்குத் தழைகள் தர இடையர்கள் கோடைக் காலத்தில் வெட்டி வீழ்த்தும் வேங்கை மரம் பூக்களை உதிர்ப்பதுபோல் வளையல்களையும், பிற ஆபரணங்களையும் களைந்து நீக்கிப் பொலிவு இழந்தனர்.

அருப்பம் பேணாது அமர் கடந்தது.உம், துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி, இரும் பாண் ஒக்கற் கடும்பு புரந்தது.உம், அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து, முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த து இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு, பருதி உருவின் பல் படைப் புரிசை, எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண், வேத வேள்வித் தொழில் முடித்தது.உம், அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்: இறந்தோன் தானே அளித்து இவ் உலகம்! அருவி மாறி, அஞ்சு வரக் கருகிப், பெரு வறங் கூர்ந்த வேனிற் காலைப், பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார், பூ வாட் கோவலர் பூவுடன் உதிரக் கொய்து கட்டு அழித்த வேங்கையின், மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே.

திணையும் துறையும் அவை. சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.