பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

245



‘அழல் அவிர் வயங்கு இழைப் பொலிந்த மேனி, நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா என, என் இவண் ஒழித்த அன்பிலாள! எண்ணாது இருக்குவை அல்லை;

என் இடம் யாது?- மற்று இசை வெய்யோயே!

திணையும் துறையும் அவை, அவனைத் தன் மகன் பிறந்த பின் பெயர்த்துச் சென்று. பொத்தியார், ‘எனக்கு இடம் தா என்று சொற்றது.

223. கோப் பெருஞ் சோழன்

நிழலாக வாழ்ந்த உனக்கு உன் நினைவாகக் கல் எடுத்துள்ளனர்.

மறுமை உலகு அடைவதற்கு உரிமை உனக்கு உள்ளது. அதுவரை உன்னை இங்கு இறுத்தி நடுகல் ஆக்கி உள்ளனர்.

உனக்குத் தரப்பட்டுள்ள இடம் மிகச் சிறியதுதான் எனினும் அதில் உன் ஆருயிர் நண்பர்க்கு என்றும் இடம் ஒதுக்கித் தருகிறாய். இவ்வகையில் இறந்தும் நீ கொடைப் பண்பு உடையவன் என்பதைக் காட்டிக் கொண்டாய்? செத்தும் கொடுத்த வள்ளல் நீ!.

பலர்க்கு நிழல் ஆகி, உலகம் மீக்கூறித், தலைப்போகன்மையின் சிறு வழி மடங்கி, நிலை பெறு நடுகல் ஆகியக்கண்ணும், இடம் கொடுத்து அளிப்ப, மன்ற - உடம்போடு இன் உயிர் விரும்பும் கிழமைத் தொல் நட்புடையார் தம்முழைச் செலினே.

திணையும் துறையும் அவை, கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.

224. சோழன் கரிகால் பெருவளத்தான்

பலர்க்கு அவன் வாழ்வு சாதனை மிக்கது. போர்களில் வெற்றி கண்டு பகைவரை அழித்தான்; புகழை விளைவித்தான்.