பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


கவிதையில் சிறந்த புலவர்களே! நம் வருத்தமிகு சுற்றத்தை

அழைத்துக் கொண்டு அக்கூற்றினைப் பழித்துக் கூறுவோம்;

‘ஒழிக’ என்று உரத்துக் கூவுவோம். பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே; ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே, அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே; திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே, மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்; அணையன் என்னாது, அத் தக்கோனை, நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று: பைதல் ஒக்கல் தமீஇ, அதனை வைகம் வம்மோ-வாய்மொழிப் புலவீர்'நனந் தலை உலகம் அரந்தை தூங்கக், கெடு இல் நல் இசை சூடி, நடுகல் ஆயினன் புரவலன் எனவே. திணையும் துறையும் அவை. அவன் நடுகற் கண்டு அவர் பாடியது.

222. கோப் பெருஞ்சோழன்

அன்று நான் உன்னுடன் இருந்து வடக்கிருக்க விரும்பினேன். உயிர்விட வந்திருந்தேன்.

நீ என்னைப் பொறுக்க என்று உரைத்தாய். நிழல் போல் நீங்காத உன் மனைவியுடன் வாழ்ந்து புகழ்மிக்க ஒரு புதல்வனைப் பெற்றபின் நீ இங்கு வந்து இருக்க என்று உரைத்தாய்.

நீ இட்ட பணி தட்ட இயலவில்லை. மகனும் பிறந்து ஆகிவிட்டது.

இனி யான் உன்னில் கலக்க விரும்புகிறேன். சான்றோர்கள் காட்டும் வழியைப் பின்பற்றி யானும் வடக்கிருக்க வந்துள்ளேன்.

நீ இப்பொழுதும் என்னைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருப்பாய். அது எனக்குத் தெரியும். எனக்கு இருக்க இடம் யாது? அதனைச் சுட்டி உரைக்க என்று வேண்டுகிறேன் என்னை ஏற்றுக் கொள்க.