பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

243



220. கோப்பெருஞ் சோழன்

நாளும் சோறு இட்டுப் பல ஆண்டுகள் பேணிக் காத்த யானை அது இறந்துபட அது கட்டப்பட்டிருந்த கம்பத்தைக் கண்டு அது வெறிச் சென்று இருக்க அதனால் கலங்கி நிற்கிறான் அதன் பாகன்.

அதுபோல் நீ உயிர் துறந்து நீங்கிவிட இவ்வூர் புகழ்மிக்க மன்றத்தைக் கண்டு அது வெறிச்சிடுவதைக் காண்கிறேன்; கலக்கம் பெரிது அடைகின்றேன்.

பெருஞ் சோறு பயந்து, பல் யாண்டு புரந்த

பெருஞ் களிறு இழந்த பைதற் பாகன்

அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,

வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்குக்,

கலங்கினென் அல்லனோ, யானே-பொலந் தார்த்

தேர் வண் கிள்ளி போகிய

பேர் இசை மூதூர் மன்றம் கண்டே?

திணையும் துறையும் அவை.

அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டும் வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.

221. கோப்பெருஞ் சோழன்

பாடுவோர்க்குக் கொடுத்துப் பல்புகழ் ஈட்டியவன்; ஆடுவோர்க்குத் தந்து அவர்கள்பால் பேரன்பு செலுத்தியவன்; அறவோர் புகழ்ந்த செங்கோல் ஆட்சி உடையவன்; நல்திறம் உடைய சான்றோர்கள்பால் உறுதியுடன் அன்பு காட்டியவன்; மகளிர்க்கு மென்மையானவன்,வலிமைமிக்க ஆடவர்க்கு வலிமை காட்டியவன்; அவர்கள் அவனை எதிர்கொள்ள இயலாமல் தோற்றனர். கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் அவன் ஆதரவு பெற்றனர். இத்தகைய சிறப்புகள் மிக்கவன் என்பதையும் பாராமல் கூற்று அவன் உயிரைக் கொண்டு சென்று விட்டது.

இவ்வுலகு துக்கமுற அழியாத நல்ல புகழை நிலைநாட்டி விட்டு நடுகல் ஆயினன்.