பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



மதிப்புமிக்க நன்கலம் அமைக்கும் காலத்தில் அவை ஒரே இடத்தில் வந்து ஒன்று சேர்கின்றன. அதுபோலச் சான்றோர் வெவ்வேறு சேய்மை இடங்களில் வாழ்ந்தாலும் ஒருங்கு கூடுகின்றனர். சான்றோர்கள் சான்றோர்களோடு கலக்கின்றனர். சால்பு இல்லாத கீழோர் சால்பு இல்லாத கீழ் மக்களோடு சேர்கின்றனர். இனம் இனத்தோடு சேரும் என்பது உண்மையாகிறது.

பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய மா மலை பயந்த காமரு மணியும், இடைபடச் சேயஆயினும், தொடை புணர்ந்து, அரு விலை நன் கலம் அமைக்கும்காலை, ஒரு வழித் தோன்றியாங்கு - என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப; சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

திணையும் துறையும் அவை.

பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது.

219. கோப்பெருஞ் சோழன்

ஆற்றிடைக் குறையுள் புள்ளிகளை நிழலாக உடைய மரத்தின் கீழ் நீ தசை வாட நாளும் மெலிந்து உயிர் விட்டாய்.

நீ இருந்த இந்த இடத்திற்குப் பல சான்றோர்கள் வந்து கூடி உன்னோடு உயிர் விட்டனர். அவர்கள் தம் கடமைகளைச் செய்தனர்.

காலம் கடந்து வந்த யான் உன்னோடு சேர்ந்து உயிர் விடும் பேற்றினைப் பெறவில்லை. அதனால் நீ என்னை வெறுக்கிறாயோ? மாறுபட நோக்குகிறாயோ?

உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல்,

முழுஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!

புலவுதி மாதோ நீயே

பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே.

திணையும் துறையும் அவை.

அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது.