பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

ரா.சீ. 241

217. கோப்பெருஞ் சோழன்

ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருக்கின்றனர். அதன் காரணமாக நட்புக் கொண்டவர்கள் இவர்கள். இத்தகைய சந்தர்ப்பத்தில் இங்கு இவன் வருவது போற்றத் தக்கதாக உள்ளது. நட்பை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கிறான்.

வருவான் என்று துணிந்து சொன்ன அரசனது பெருமையும், அது பழுது ஆகாமல் வந்தவன் அறிவும் வியக்கும்தோறும் அது முடிவு அற்றதாக உள்ளது. வியப்புக்கு அளவே இல்லை.

அதனால் தன் ஆட்சி இயங்காத மற்றொரு தேசத்தில் வாழும் சான்றோனின் நெஞ்சில் இடம் பெற்று அதனால் புகழ் மிக்கவன் ஆயினான். அவனை இழந்த இவ்வுலகம் இதனை எவ்வாறு தாங்கும்? இரங்கத் தக்கது.

நினைக்கும்காலை மருட்கை உடைத்தே, எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல், அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக, இனையது ஓர் காலை ஈங்கு வருதல்; ‘வருவன் என்ற கோனது பெருமையும், அது பழுது இன்றி வந்தவன் அறிவும், - வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே: அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை அன்னோனை இழந்த இவ் உலகம் என் ஆவதுகொல்? அளியது தானே!

திணை - பொதுவியல், துறை - கையறுநிலை. அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார்

பாடியது.

218. கோப்பெருஞ் சோழன்

பொன்னும், பவழமும், முத்தும், மணியும் பிறக்கும் இடங்கள் ஒன்றுக்கு ஒன்று சேய்மைய ஆகும். கடலில் பிறப்பவை முத்தும் பவழமும்; மலையில் கிடைப்பவை பொன்னும் மணியும்; ஒவ்வொன்றும் வெவ்வேறு இடத்திலிருந்து பெறுபவை.