பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



216. கோப்பெருஞ் சோழன்

‘உன் நண்பன் உன்னைப் பற்றிச் செவி வழி அறிந்திருக்கிறானே தவிர நேரில் கண்டது இல்லை. ஆண்டுகள் ஒருசேரப் பழகியவர் ஆயினும் சிலசமயம் துன்பத்தைக் கேட்டு வராமல் இருப்பவரும் உளர். இது உலக இயல்பு.

அப்படி இருக்க ஆந்தையார் எப்படி வருவார்'என்று நீங்கள் ஐயம் கொள்கின்றீர்.

அவன் என்னை என்றும் இகழ்ந்து பேசியது இல்லை. இனியன்; நெருங்கிய நண்பன்; புகழைக் கெடுக்கும் பொய்ம்மை அவனிடம் என்றும் இருந்தது இல்லை.

உன் பெயர் யாது? என்று யாராவது கேட்டால் தன் பெயர் சோழன் என்று எளியனாகிய என் பெயரைத் தான் கூறுவான். அத்தகைய கெழுதகை நண்பன் அவன். அது மட்டுமல்ல; இத்தகையதோர் காலத்தில் அவன் அங்கு நிற்க மாட்டான். இப்பொழுதே வந்து சேர்வான். அவனுக்கு என்று இடம் ஒதுக்கி வைப்பீராக!

உணர்ச்சி நட்பைத் தரும்; நாளும் பழகத் தேவையே இல்லை.

கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் காண்டல் இல்லாது யாண்டு பல கழிய, வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும், அரிதே தோன்றல்! அதற்பட ஒழுகல் என்று, ஐயங் கொள்ளன்மின், ஆர் அறிவாளி: இகழ்விலன், இனியன் யாத்த நண்பினன், புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே, தன் பெயர் கிளக்கும்காலை, என் பெயர் பேதைச் சோழன் என்னும், சிறந்த காதற் கிழமையும் உடையன் அதன்தலை, இன்னது ஓர் காலை நில்லலன்; இன்னே வருகுவன் ஒழிக்க, அவற்கு இடமே!

திணையும் துறையும் அவை.

அவன் வடக்கிருந்தான். பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க என்றது.