பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

239

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்குச் செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின், தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்; தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்எனின், மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; மாறிப் பிறவார்ஆயினும், இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே.

திணை - பொதுவியல் துறை - பொருண்மொழிக் காஞ்சி. அவன் வடக்கிருந்தான் சொற்றது.

215. கோப் பெருஞ்சோழன்

வரகுச் சோற்றை வேளை வெண்பூ இட்டு ஆயர் மகள்

படைத்த புளிக்குழம்பு அதனை அவரை பயிரிடுவோர் பசி தீர உண்பர். அத்தகையோர் வாழும் பொதிகை மலையை உடையது பாண்டிய நாடு.

அந்நாட்டில் பிசிர் என்னும் சிற்றுரில் வாழ்ந்து

கொண்டிருக்கிறான்; அவன் என் ஆருயிர் நண்பன் ஆவான். செல்வம் உற்றபோது அவன் வாராமல் இருக்கலாம்; துன்பப் படுங் காலத்தில் அவன் அங்குத் தங்க மாட்டான். என்னைக்

காணத் தாமதம் செய்யான் உடனே வருவது உறுதி.

கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் தாது எரு மறுகின் போதொடு பொதுளிய வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளி.இ. ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை அவரை கொய்யுநர் ஆர மாந்தும் தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் பிசிரோன் என்ப, என் உயிர் ஒம்புநனே; செல்வக் காலை நிற்பினும், அல்லற் காலை நில்லலன்மன்னே.

திணை - பாடாண் திணை, துறை - இயன்மொழி. கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் வாரார் என்ற சான்றோர்க்கு அவர் வருவார்

என்று சொல்லியது.