பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



எழுமதி, வாழ்க, நின் உள்ளம் அழிந்தோர்க்கு ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது செய்தல் வேண்டுமால், நன்றே-வானோர் அரும் பெறல் உலகத்து ஆன்றவர் விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே.

திணை - வஞ்சி; துறை - துணைவஞ்சி,

அவன் மக்கள்மேல் சென்றானைப் புல்லாற்றுர் எயிற்றியனார் பாடியது.

214. கோப்பெருஞ் சோழன்

யான் வடக்கிருக்கத் துணிந்தேன். இது அரிய தவம்தான். இதனைச் செய்வது தக்கதா இல்லையா என்று ஐயுறுவோர் பலர். இஃது அரிய தவம். இதனால் விளையும் நன்மைகள் யாவை?

யானையை வேட்டையாடச் செல்வோர் உயர் நோக்கம் கொண்டவர்; நிச்சயம் அதில் வெற்றியடைவர். குறும்பூழ் மிகச் சிறிய பறவை; அதனைப் பெற வேட்டையில் சென்று வலை விரிப்பர். அது பெறாமல் திரும்பி விடுவர். அவர் நோக்கம் சிறியது. அவர் ஊக்கமும் சிறியது. ஆக்கமும் சிறியது ஆகும்.

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளுக. அது தள்ளினும் தளராமல் தொடரத்தக்கது. உயர்வு உள்ளிச்செயல்படுபவர் நிச்சயம் உயர்வையே அடைவர்.

அவர்கள் துறக்க வாழ்வை எய்துவர். அது இல்லை எனில் பிறவாமை ஆகிய உயர்நிலை அடைவர். அது கூடாதாயின் இவ்வுலகில் அவர் புகழ் இமயத்தைப் போல் உச்ச நிலை அடையும். இம்மூன்று நன்மைகள் அவர்களுக்குக் காத்திருக்கின்றன. எனவே தவம் செய்வார் உயர்வு அடைவது உறுதி. வடக்கிருப்பது இது கருதியே ஆகும்.

செய்குவம்கொல்லோ, நல்வினை? எனவே ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே, யானை வேட்டுவன் யானையும் பெறுமே; குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே: