பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

237


நீ மேல் உலகம் அடைகின்றாய் என்று வைத்துக் கொள்.

அப்பொழுது இந்த ஆட்சி உரிமை யாருக்குப் போய்ச் சேரும்?

அவர் தாமே உனக்கு வாரிசுகள் ஆவர்.

வேறு வகையாக நினைத்துப் பார். நீ போர்க் களத்தில் அவர்களைக் கொன்று விட்டால் உன் ஆட்சியை யாருக்குத் தரப் போகிறாய்.

தப்பித் தவறி நீ தோற்று விடுகிறாய் என்று வைத்துக் கொள். பிள்ளைகளிடம் தோற்று விட்டாய் என்ற இழிச் சொல் உன்னை வந்து சேராதா? தோல்வியை உன்னால் தாங்கிக் கொள்ள

முடியுமா?

அதனால் உன் உயிர்க்கு உறுதி தேடிக் கொள்; அற வாழ்க்கை ஏற்றுப் போர் ஒழிந்து விலகி விடு; அதுவே உனக்கு மறுமைக்கு வழி யும் ஆகும். வானுலகம் உன்னை நல் விருந்தாக ஏற்றுக் கொள்ளும்.

மண்டு அமர் அட்ட மதனுடை நோன் தாள், வெண்குடை விளக்கும், விறல் கெழு வேந்தே! பொங்கு நீர் உடுத்த இம் மலர் தலை உலகத்து, நின்தலை வந்த இருவரை நினைப்பின், தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர், அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்ப்பு எழுந்தவர்; நினையும்காலை, நீயும் மற்றவர்க்கு அனையை அல்லை; அடு மான் தோன்றல்! பரந்து படு நல் இசை எய்தி; மற்றுநீ உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும் ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே: அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும் இன்னும் கேண்மதி, இசை வெய்யோயே! நின்ற துப்பொடு நிற் குறித்து எழுந்த எண் இல் காட்சி இளையோர் தோற்பின், நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே? அமர் வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின், இகழுநர் உவப்பப், பழி எஞ்சுவையே: அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல் விரைந்து