பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



212. கோப்பெருஞ்சோழன்

நீ மதித்துப் போற்றும் தலைவன் யார் என்று வினவினால் அவன் யார் என்பதைக் கூறுகிறேன் கேட்பீராக!

அவன் நாட்டுக் களமர்கள் வடிகட்டிய கள்ளை ஆமை இறைச்சியோடு சேர்த்து வேட்கை தீரப் பருகுவர். ஆரல்மீனைச் சுட்டு அச்சூட்டோடு தம் கதுப்பில் இட்டு அதுக்குவர். கள் மயக்கத்தில் செய் தொழிலை மறந்து மகிழ்வில் ஆழ்வர். விழாக்கள் மிக்க நாடு அது.

அவன் தன்னை நாடி வரும் பாணர்க்கு விருந்து தந்து பசியைப் போக்குபவன்; பாணர் பசிக்குப் பகைவன். அவன் கோழியூரில் வாழ்பவன்; கோழியூர்ச் சோழன் என்று அவனைக் குறிப்பிடுவர். பொத்தியார் என்னும் புலவரோடு நகைத்துப் பேசி நட்புக் கொண்டாடி நலமு டன் வாழ்கிறான். அவனே யான் போற்றும் தலைவன் ஆவான்.

‘தும் கோ யார்? என வினவின், எம் கோக் களமர்க்கு அரித்த விளையல் வெங் கள் யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா, ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ, வைகு தொழில் மடியும் மடியா விழவின் யாணர் நல் நாட்டுள்ளும், பாணர் பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகிக், கோழியோனே, கோப்பெருஞ்சோழன்பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ, வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே.

திணை - அது; துறை - இயன்மொழி கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

213. கோப் பெருஞ்சோழன்

உன் மக்கள் இருவரோடு போர் செய்யப் படை கொண்டு போர்க்களம் செல்ல முனைந்துள்ளாய்; உன்னை எதிர்க்கப் போகின்றவர் யார்? சற்றுச் சிந்தித்துப் பார். தொன்று தொட்டு அவர்கள் உன் பகைவராகிய சேர, பாண்டியர் அல்லர். வேற்றார் அல்லர். நீயும் அவர்க்குப் பழம் பகையும் அல்லை.