பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

235



புகழுக்கு ஏற்றவன் அல்ல நீ என்பதை அறிகிறேன்; வறிதே பெயர்கிறேன்.

என் வீட்டில் வறுமை என் பெருமையை அழிக்கிறது; அரிசி இல்லாமையால் வரிசையாக எலிகள் ஒன்றன் பின் ஒன்று செத்து மடிந்து கொண்டிருக்கின்றன.

பால்இல்லை; பலமுறை சலித்து விட்ட என் புதல்வன் முலை கொள்வதை மறந்தனன்.

அவள் வாடிக் கிடக்கும் புதல்வனொடு மனை வாழ்க்கை யைத் தொலைத்துவிட்டு அதைத் தேடிக் கொண்டிருக்கிறாள். அவளை நாடி யான் செல்கிறேன்.

அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு அணங்குடை அரவின் அருந் தலை துமிய, நின்று காண்பன்ன நீள் மலை மிளிரக், குன்று தூவ எறியும் அரவம் போல, முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று, அரைசு படக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின் உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென், “வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் எனக், கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின் உள்ளியது முடித்தோய் மன்ற முன் நாள் கை உள்ளது போல் காட்டி வழி நாள் பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் நாணாய் ஆயினும், நாணக் கூறி, என் நுணங்கு செந் நா அணங்க ஏத்திப், பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின் ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச் செல்வல் அத்தை, யானே- வைகலும், வல்சி இன்மையின் வயின்வயின் மாறி, இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின், பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து, முலைக்கோள் மறந்த புதல்வனொடு, மனைத் தொலைந்திருந்த என் வாணுதற் படர்ந்தே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.