பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது, அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு, நும்மனோரும் மற்று இனையர்ஆயின், எம்மனோர் இவண் பிறவலர் மாதோ, செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி உயிர் சிறிது உடையள்ஆயின், எம்வயின் உள்ளாது இருத்தலோ அரிதே அதனால், ‘அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியப் பிறன் ஆயினன்கொல்? இlஇயர், என் உயிர்’ என நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும் இடுக்கண் மனையோள் திரிய, இந் நிலை விடுத்தேன்; வாழியர், குருசில்!உதுக் காண்: அவல நெஞ்சமொடு செல்வல்-நிற் கறுத்தோர் அருங் கடி முனை அரண் போலப் பெருங் கையற்ற என்லம்பு முந்துறுத்தே.

திணையும் துறையும் அவை. சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங்

குன்றுர் கிழார் பாடியது.

211 சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை

போர்கள் பல செய்து வெற்றிகள் கண்ட வேந்தன் நீ! உன்பால் கொடைப் பண்பும் உள்ளது என்று நினைத்துப் பரிசில் பெற உன்னை நாடி வந்தேன். வள்ளலாக இருப்பாய், வாரி வழங்குவாய் என்னும் கற்பனையில் உன்னை வந்து சேர்ந்தேன்.

கொடுத்து அறியாத பிற கொடுமையரின் கீழ்மையையும் எடுத்து உரைத்தேன். அதனால் நீ மனம் மாறுவாய் என்று எதிர்பார்த்தேன்.

முதல்நாள் முகமன் கூறி என்னை வரவேற்றபோது முழுதும் நம்பினேன்; அளிப்பாய் என்று கருதினேன். இனிக்கப் பேசிய நீ சுளிக்க நடந்து கொள்வாய் என்று யான் எதிர்பார்க்கவே இல்லை.

அடுத்து உன்னை அடைந்து தொடுத்த புகழ்மொழியை நாணாது நீ ஏற்றாய். பொய்த்தாய் என்பதை மெய்ப்பித்தாய்.