பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

233



மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து, பெருமலை விடரகம் சிலம்ப முன்னிப், பழனுடைப் பெரு மரம்-தீர்ந்தெனக், கையற்றுப், பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென் வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந: ஈயாய்ஆயினும், இரங்குவென் அல்லேன், நோய் இலை ஆகுமதி பெரும நம்முள் குறு நணி காண்குவதாக- நாளும், நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தேம் மொழித் தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும்

பெரு வரை அன்ன மார்பின், செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே!

திணை - அது - பரிசில் கடா நிலை. மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

210. சேரன் குடக்கோச்சேரல் இரும்பொறை

உலக மக்களைக் காக்கும் வேந்தர்கள் உன்னைப் போல் வன்நெஞ்சர்களாக மாறி விடுகின்றனர். இவ்வாறு மாறிவிட்டால் எங்களைப் போன்ற இரவலர்கள் எவ்வாறு வாழ்வது? நாங்கள் பிறக்கவே கூடாது.

இங்குக் காத்திருப்பதால் என்ன பயன்? என்னையே நினைத்துக் கொண்டு என் வருகைக்காகக் காத்திருக்கிறாள் என் காதல் மனைவி; நான் செத்தேனா, வாழ்கிறேனா என்பதும் அறியாமல் நாளும் நாளும் அழிந்து கொண்டிருக்கிறாள். அவளைச் சென்று பார்த்து அவளுக்கு நான் உயிருடன் இருக்கிறேன் என்பதையாவது தெரிவிக்க வேண்டும்.

நீ அழிக்கும் பகைவர் அரண்களைப் போல என் வாழ்வும் சிதைந்து விட்டது. என் வறுமை என்னோடு உடன் வருகிறது. அதை முன்னே அனுப்பிவிட்டு அதனை யான் பின் தொடர் கிறேன். அவல நெஞ்சோடு யான் செல்கின்றேன்.