பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



வாணிகப் பரிசிலன் அல்லென் பேணித், தினை அனைத்து.ஆயினும், இனிது - அவர் துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.

திணையும் துறையும் அவை,

அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது. ‘இது கொண்டு செல்க’ என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளது. அவர் சொல்லியது.

209. மூவன்

பொய்கையில் மேய்ந்த நாரை நெற்போரில் சென்று உறங்கும். நெய்தல் பூத்த கழனியில் நெற்கதிர் அறுக்கும் உழவர் அகன்ற ஆம்பல் இலையில் மதுவைத் தேக்கிப் பருகிப் பின் கடல் அலைகளின் ஒசையை இசையாகக் கேட்டு மயங்குவர். அத்தகைய நன்செய் நிலத்தையுடைய நாட்டுத் தலைவனே!

கனிகள் பல உண்ண விரும்பிக் ககனத்தில் பறந்து காடுமலைகளைக் கடக்கும் பறவைகள் பழம் தரும் பெரிய மரங்கள் தீர்ந்து விட்டதால் வறிதே திரும்புகின்றன.

அப்பறவைகளைப் போலப் பரிசில் பெற விரும்பி நின் இசை நுவல வந்தேன். பரிசில் பெறாமல் திரும்பிச் செல்கிறேன்.

வாள்போரில் மேம்படும் சிறப்புடையவன் நீ பெருவீரன். நீ பரிசில் தரவில்லையாயினும் உன்பால் எனக்கு யாதும் வருத்தம் இல்லை. நீ நோய் இன்றி வாழ்க..நீ புலவனை மதித்துப் போற்றவில்லை என்பது இந்த அவைக்குத்தான் தெரியும். அழகுமிக்க மகளிர் உன்னைத் தழுவி மகிழக் காத்திருக்கும் இருக்கை இது. இவ் இருக்கையில் உள்ள ஒரு சிலர்க்கு மட்டும் இச் செய்தி தெரிந்தால் அது தவிர்க்க இயலாது. வெளியே தெரிந்தால் அது உனக்கும் பெருமை அன்று. எனக்கும் ஏற்றது அன்று.

பொய்கை நாரை போர்வில் சேக்கும்

நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர்

கூம்பு விடு மென் பிணி அவிழ்ந்த ஆம்பல்

அகல் அடை அரியல் மாந்தித் தெண் கடல்

படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும்