பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

231



எழு இனி, நெஞ்சம் செல்கம், யாரோ, பருகு அன்ன வேட்கை இல்வழி, அருகில் கண்டும் அறியார் போல, அகம் நக வாரா முகன் அழி பரிசில் தாள் இலாளர் வேளார் அல்லர்? ‘வருக என வேண்டும் வரிசையோர்க்கே பெரிதே உலகம் பேணுநர் பலரே மீளி முன்பின் ஆளி போல, உள்ளம் உள் அவிழ்ந்து அடங்காது, வெள்ளென நோவாதோன்வயின் திரங்கி, வாயா வன் கனிக்கு உலமருவோரே.

திணையும் துறையும் அவை, வெளிமான் துஞ்சிய பின், அவன் தம்பி இள வெளிமானைப் பரிசில் கொடு என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது. பெருஞ்சித்திரனார் பாடியது.

208. அதியமான் நெடுமான் அஞ்சி

குன்றுகளையும் மலைகளையும் கடந்து பரிசில் பெற இங்கு வந்துள்ளேன். என்னைக் காணாமல் எனக்குப் பரிசு தந்து அனுப்பு கிறான். ‘வந்தவர் யார்? அவர் தரம் யாது’ என்பவற்றை ஆராயாமல் தரும் பரிசு இது; அது மட்டுமல்ல. நேரில் பார்த்து மதித்துத் தராதது இது.

காணாமல் தந்து அனுப்ப அதைப் பெற்றுக் கொள்ள யான் ஒன்றும் வாணிகப் பரிசிலன் அல்லன்; காசுக்காக அலைபவன் அல்லன்; பொருள் எனது நோக்கம் அன்று.

புலவர் தம் மதிப்பு அறிந்து தருவாராயின் தினையளவு தந்தாலும் அது மதிக்கத் தக்கது.

“குன்றும் மலையும் பல பின் ஒழிய, வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு என நின்ற என் நயந்து அருளி, ஈது கொண்டு, ஈங்கனம் செல்க, தான் என, என்னை யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்? காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஒர்