பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


செய்தி அவளுக்குப் பேருவகை அளித்தது. அவள் அடைந்த பேரு வகை ஈன்ற ஞான்றினும் பெரிது ஆகும்.

மூங்கில் செறிந்த மலையின்கண் அதில் படும் மழைத்துளி போல அவள் உவகைக் கண்ணிர் பலவாகும். அக்காட்சி மகிழ்வு தருவதாகும்.

‘மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணி நோன் கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே

திணையும் துறையும் அவை.

பூங்கண் உத்திரையார் பாடியது.

278. காக்கை பாடினியார் நச்செள்ளையார்

நரம்பு மேல் எழுந்து உலர்ந்து மெலிந்த தோள்களையும், தாமரை இலை போன்ற அடிவயிற்றினையும் உடைய முதியவளின் மகன் அவன் படைக்குத் தோற்றுப் புறமுதுகு இட்டான் என்று பலர் சொல்ல அதைக் கேட்டு ‘அடர்த்துச் செய்யும் போர்க்கு அவன் உடைந்து விட்டான்; தோற்று ஓடினான் என்பது உண்மையாயின் அவனுக்குப் பால் தந்த என் முலையை அறுத்து எறிவேன்’ என்று சொல்லியவளாய்க் கையில் வாளேந்திக் கொண்டு போர்க் களம் அடைந்தாள். அங்கே துழவித் தன் மகன் சிதைந்து வேறாகக் காணப்பட அவன் இறந்துபட்ட நிலையில் அவன் உடலைக் கண்டாள். அவன் பிறந்தநாள் தான் அடைந்த மகிழ்ச்சியைவிட அவள் பெரிது உவந்தனள்.

‘நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள், முளரி மருங்கின், முதியோள் சிறுவன் படை அழிந்து, மாறினன்’ என்று பலர் கூற, ‘மண்டு அமர்க்கு உடைந்தனன்.ஆயின், உண்ட என் முலை அறுத்திடுவென், யான் எனச் சினை.இக்,