பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

291

கொண்ட வாளொடு படு பிணம் பெயராச், செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய படு மகன் கிடக்கை காணுஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே! திணையும் துறையும் அவை,

காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.

279. ஒக்கூார் மாசாத்தியார்

இது மிகவும் கொடியது; அவள் துணிவு மிகக் கடுமையானது. ‘மூதின் மகள் என்ற சிறப்புக்கு இவள் மிகவும்

பொருத்தமானவளே.

முதல் நாட்போரில் இவள் தந்தை யானை எறிந்து களத்தில்

ஒழிந்தான்.

நேற்று நடந்த போரில் இவள் கொழுநன் பசு நிரைகளை

மீட்கச் சென்றவன் ஆண்டு இறந்து பட்டான்.

இன்றும் போர்ப் பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேலைக்

கையில் தந்து வெளிது விரித்து உடுத்திப் பரட்டைத் தலை மயிர் முடியை எண்ணெய் இட்டு வாரி முடித்துக் குடிக்கு ஒரே மகன் அவனைச் செருமுகம் நோக்கிச் செல்க என்று அனுப்பி வைக்கிறாள்.

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே: மூதில் மகளிராதல் தகுமே: மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை, யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே, நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன், பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே, இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி, வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇப், பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி, ஒரு மகன் அல்லது இல்லோள், செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே!

)TT - 61/5; 5)/68) II) - ல் (மல்லை.

துறை மு

ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.