பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



ஈரச் செவ்வி உதவின.ஆயினும், பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி, வீறு வீறு ஆயும் உழவன் போலப், பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய மூதிலாளருள்ளும், காதலின் தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை, இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே: கேட்டியோ வாழி - பாண பாசறைப், ‘பூக் கோள் இன்று என்று அறையும் மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?

திணை - . துறை - . முல்லை. கழாத்தலையார் பாடியது.

290. ஒளவையார்

இவனுக்கு முதலில் கள்ளை வார்த்துக் கொடு; தலைவனே! உன் தந்தைக்குத் தந்தைக்காக இவன் பாட்டன் போரில் கண் இமைக்காமல் பகைவர் எறிந்த வேல்களைத் தாங்கிப் போரில் உயிர் விட்டான். ஆரைச் சக்கரத்தின் குடம்போல் அவன் அம்புகளைத் தாங்கி உயிர் விட்டான்.

அன்று பாட்டன் செய்கை அது இவன் மழையைத் தடுக்கும் பனை ஒலைக் குடை போல உன்னை நோக்கி வரும் பகைவர்தம் வேல்களைத் தான் தாங்கிக் கொண்டு மறைப்பான். உனக்கு இவன் மெய்க் காவலனாக விளங்குவான்.

குடி மரபு இது அவ்வழியில் வந்தவன் இவன். இவனுக்கு நீ முதலில் சிறப்புச் செய்க, கள் வார்த்துக் கொடு.

இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே, சினப் போர் இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை, எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன் அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே, மறப் புகழ் நிறைந்த மைந்தினேர்ன் இவனும்,