பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

299



288, கழாத் தலையார்

கூர்மை மிக்க கொம்புகளை உடைய எருதுகள் அவற்றை மோதவிட்டு வெல்லும் எருதின் தோலைக் கொண்டு போர்த்திய முரசு போர்க் களத்தில் முழங்க நடந்த போரில் நெடுவேல் பாய்ந்து விட்டது. அது ஏளனத்துக்குரியது என்று நாணம் உற்ற வீரன் தரையில் கிடக்கிறான். அருகு சென்று வீட்டு மனையாள். அவள் பெருமிதம் கொண்டு அவனைத் தழுவ விழைகிறாள். அதனைத் தடுத்து நிறுத்துகிறது மேல் வட்டமிட்டு வந்து மொய்க்கும் பருந்து என்னும் பறவை.

மண் கொள வரிந்த வைந் நுதி மருப்பின் அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து, வென்றதன் பச்சை சீவாது போர்த்த திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க, ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, நெடு வேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து, அருகுகை .............................. மன்ற குருதியொடு துயல்வரு மார்பின் முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே

திணை - தும்பை, துறை - மூதில் முல்லை. கழாத்தலையார் பாடியது.

289. கழாத் தலையார்

வளம்மிக்க வயல் தனது விளைச்சளைத் தரும் என்றாலும் உழுகின்ற உழவன் பல எருதுகளுக்குள்ளே சிறந்ததையே தேர்ந்து எடுப்பான்.

அதுபோல வீரர்கள் பலர் உளர். ஆயினும் இவனையே சிறப்பித்துக் கள் தந்து நாட்டு அரசன் ஊக்குவித்தான். பெருமைப் படுத்தினான். இவனுக்கே மதுவினைத் தருக என்று கூறுகிறான்.

இதைக் கண்டு வியக்கின்றாய்; பாணனே! அதோ பூக்கொள்க’ என்று பறை அறைந்து தெரிவிக்கும் போர்ச் செய்தி அதனைக் கேள். அவனுக்குக்கள் பெரிது அன்று களம்தான் பெரிது.