பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



தவறு. அவன் முனைப்பையே இது காட்டுகிறது. குடித்துவிட்டு உடனே செல்ல வேண்டும் என்பது அவன் ஆர்வம். வாளை அவன் கையில் ஏந்தி விட்டான்.

போர்க் களத்தில் எதிரிகள் தாக்க வரும்போது தன் முறை வரட்டும் என்று இவன் காத்திருப்பது இல்லை. மற்றவர்களை முந்திக் கொண்டு போர் முனையில் நிற்கிறான். அதுபோலத்தான் இப்பொழுதும் அவசரப்படுகிறான். குடிக்கிறான்; வாள் எடுக்கிறான்.

இதைப் புரிந்து கொள்ளாத அற்பர்கள் தாம் இதில் குறை காண்பர்; அவனைப் பழித்துப் பேசுவர்.

வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் யாம் தனக்கு உறுமுறை வளாவ, விலக்கி, ‘வாய் வாள் பற்றி நின்றனன் என்று. சினவல் ஒம்புமின், சிறு புல்லாளர்! ஈண்டே போல வேண்டுவன ஆயின், என் முறை வருக என்னான், கம்மென எழு தரு பெரும் படை விலக்கி, ஆண்டும் நிற்கும் ஆண் தகையன்னே;

திணை - வஞ்சி; துறை - பெருஞ்சோற்றுநிலை. விரிச்சியூர் நன்னாகனார் பாடியது

293.நொச்சி நியமம் கிழார்

யானைகளின் மீது இருந்து வள்ளுவன் போர்ச் செய்தியை ஊருக்குத் தெரிவிக்கிறான். ‘போருக்குப் புறப்படப் பூவினை வந்து பெறுங்கள் என்று அறிவிக்கிறான்.

ஏவலைக் கேட்டுக் காவலுக்கு வீரர்கள் செல்வர். தனிமை உற்ற வீரர் தம் மனைவியர் பூவினை ஏற்கார் என்று தெரிந்து பூவிலையாட்டி இம்மனைகளை விட்டுப் பிற மனைகளுக்குச் செல்கிறாள். இவள் நிலைமை இரங்கத்தக்கது.

நிறப் படைக்கு ஒல்கா யானை மேலோன் குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை