பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

303



நாண் உடை மாக்கட்கு இரங்கும்.ஆயின், எம்மினும் பேர் எழில் இழந்து, வினை எனப் பிறர் மனை புகுவள்கொல்லோஅளியன் தானே, பூவிலைப் பெண்டே!

திணை - காஞ்சி; துறை - பூக்கோட் காஞ்சி. நொச்சி நியமங் கிழார் பாடியது.

294. பெருந்தலைச்சாத்தனார்

வெண் கொற்றக் குடை போல் மதியம் வானில் நின்று ஒளி செய்யக் கடல்போல் பரந்த பாசறையினின்று புதிய படைக் கருவிகளை ஏந்தியவராய்க் களம் புகும் வீரர்கள் இரு திறத்தவரும் கண்முன் எதுவும் தோன்றாமல் யார் எவர் என்று பாராமல் தாக்கிக் கொள்கின்றனர்.

‘உம் அரசர் யார் என்பதையும் அவன் பெயரையும் சொல்லி நும்முள் வாழ்நாள் முடிந்தவர் எம்முன் வருக’ என்று வீரர்களைக் கூவி அழைத்து முழக்கம் செய்கிறான் போருக்குச் சென்று உள்ள வீரன்.

அரவு உமிழ்ந்த மணியை யாரும் துணிந்து சென்று தொடுவது இல்லை. அதுபோல் அவனை அணுக யாரும் வந்திலர். அவன் போர்ச் செயல் இது. அவ்வீரன் தான் உன் கணவன்; நீ பெருமை கொள்க

வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தரக், கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறைக், குமரிப் படை தழிஇய கூற்று வினை ஆடவர் தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து, இறையும் பெயரும் தோற்றி, நுமருள் - நாள் முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு எனப், போர் மலைந்து ஒரு சிறை நிற்ப, யாவரும் அரவு உமிழ் மணியின் குறுகார்நிரை தார் மார்பின் நின் கேள்வனைப், பிறரே

திணை - தும்பை துறை - தானைமறம்

பெருந்தலைச் சாத்தனார் பாடியது.